போதையால் சீரழியும் தமிழகம்; எதுகை மோனை பேச்சு வேண்டாம்; எடப்பாடி பழனிச்சாமி காட்டம்,..

Author: Sudha
30 July 2024, 8:25 am

மிழகத்தின் தலைநகரான சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் போலீசாரால் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீவிரமாக அதிகரித்துள்ளது. அடிக்கடி செய்திகளில் ”போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை! , கஞ்சா விற்பனை செய்த பிரமுகர் கைது!“ என்பது போன்ற செய்திகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது.கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின்  எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதனால் நடைபெறும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

சமீபத்தில் சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ, ரெட்ஹில்ஸ் அருகே குடோன் ஒன்றில் 1 கிலோ என 70 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது x தள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அடிக்கடி போதைப் பொருட்கள் பறிமுதல் என வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் திரு.மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விடியா திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் “செயலற்ற ஆட்சி”யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

மேலும் தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என முதல்வரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!