திருப்பதியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி… குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம்..!!

Author: Babu Lakshmanan
10 September 2022, 9:20 am

திருப்பதி: முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் ஆன எடப்பாடி பழனிசாமி இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் வராக சாமியை வழிபட்டார். தொடர்ந்து, திருமலையில் இரவு தங்கிய அவர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

சாமி கும்பிட்ட பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரியாக தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத ஆசி வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் தேங்காய் உடைக்கும் இடத்திற்கு சென்று கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!