கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு… மணல்போக்கி குறித்த எச்சரிக்கை பலகை வைக்காதது ஏன்? – இபிஎஸ் கேள்வி!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 8:50 pm

சென்னை : தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்தது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அவர்களின் உடல் மீட்கப்பட்டது. 6 பேரின் உயிரிழப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்தது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் (38)பிரித்திவிராஜ் (36 )தாவீது (30) ஈசாக் (19) பிரவீன்ராஜ் (19) கெர்மஸ் (18) ஆகிய ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை தருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்,இந்த விடியாஅரசு மணல்போக்கி குறித்து எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்காததை கண்டிப்பதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10லட்சம் நிவாரண நிதி வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 523

    0

    0