அண்ணாமலைக்கு அந்த அதிகாரம் கிடையாது… அவங்களே சொல்லிட்டாங்க : இறங்கி அடிக்கும் இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 10:46 am

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச அண்ணாமலைக்கு அதிகாரம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வருகை தந்தார். பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக சேலம் வந்த அவருக்கு மாவட்ட எல்லையில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர். திருவாக்கவுண்டனூர் பகுதியில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அழைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சேலம் மாநகரின் மையப் பகுதியில் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, நிகழ்விடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்ப மரியாதை என உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்து முடிவு செய்வது மத்தியில் உள்ளவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்றும், அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டதாக தெரிவித்தார். மேலும், அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தின் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை எனவும் தெரிவித்தார்.

எம்ஜிஆர் கட்சியை துவங்கும் போது பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும், அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும் கூறிய எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் தலைவர்களும் எவ்வளவு சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள், என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1247

    0

    0