செந்தில் பாலாஜி கைது… முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம் ; வீடியோவை வெளியிட்டு திருப்பி அடித்த இபிஎஸ்…!!!

Author: Babu Lakshmanan
16 June 2023, 11:50 am

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் இவ்வளவு பதற்றம் அடைவது ஏன்..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதால் திமுகவே அதிர்ந்து போயுள்ளது. அதோடு, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசி வந்தார்.

மேலும், நேற்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசி வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தன்னை விமர்சித்ததற்காகவும், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதற்காகவும் பதிலளித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது :-செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றம் அடைவது ஏன்..? உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சி பறிபோகும் என்ற அச்சத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்.

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட இந்த ஆர்ப்பாட்டம் இல்லை.சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்ட போது முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்திக்கவில்லை. ஆனால், செந்தில் பாலாஜியை ஓடோடிச் சென்று பார்த்தார்.

தமிழகத்தில் பல பார்கள் முறைகேடாக செயல்பட்டு வருகின்றன. 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடிக்கு மேலாக பல துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.
2 ஆண்டுகள் திமுக ஆட்சி என்பது ஊழலின் வளர்ச்சியாக தான் உள்ளது.

வழக்குகளை திமுகவினர் துணிச்சலோடு சந்திக்க வேண்டும், அதிமுகவினர் துணிச்சலோடு சந்தித்து வருகிறோம். செந்தில் பாலாஜி நல்லவர் போன்ற ஒரு தோற்றத்தை முதலமைச்சர் உருவாக்கி வருகிறார். சோதனையின் போது வருமானவரித்துறை தாக்கப்பட்ட போது முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. எங்களுக்கு பதவி முக்கியமல்ல, தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவது தான் அதிமுகவின் லட்சியம்; அதிமுகவை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள். எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Arya and Santhanam reunion வைரலாகும் NEXT LEVEL போஸ்டர்:10 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஆர்யா- சந்தானம்…எந்த படம்னு தெரியுமா..!