அதிமுகவின் அந்த ஒரு ஆக்ஷன்… பயந்து நடுநடுங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ; பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

Author: Babu Lakshmanan
24 October 2023, 9:42 pm

அதிமுகவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- என்னை பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை ஊடகத்திலோ, பத்திரிகையிலோ பொய் செய்தி வெளியிட்டதில்லை. எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை நான் எப்போதும் கொடுத்ததில்லை.

ஆனால் வேண்டுமென்றே ஸ்டாலின் என்னை பற்றி தவறாக விமர்சித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிய பிறகு, எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார். ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது, விலகுவது அந்த கட்சியை பொருத்தது.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்ட காரணத்தினால் தி.மு.க. தலைவர் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு மற்றும் அறிக்கையில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது. 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தையும் முதலமைச்சர் கிடப்பில் போட்டுள்ளார். வரிகளை எல்லாம் உயர்த்தியும் அரசிடம் நிதி பற்றாக்குறை தான் உள்ளது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. அந்த கட்டடங்களே தற்போது திறந்து வைக்கப்படுகின்றன, என்று கூறினார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 350

    0

    0