தொண்டர்களின் விருப்பத்திற்கு கிடைத்த வெற்றி ; அதிமுகவில் இனி ஒற்றைத் தலைமை தான் ; வழக்கறிஞர் இன்பதுரை

Author: Babu Lakshmanan
2 September 2022, 12:11 pm

நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அதிமுகவில் இனி ஒற்றைத்தலைமை தான் என்று அக்கட்சியின் வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்ட பிறகு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், இன்று காலை இந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர். அதில், அதிமுக பொதுக்குழு செல்லாது என தனிநீதிபதி அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை, இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. இதன்படி, ஒற்றைத் தலைமை என்ற அதிமுகவின் நோக்கம், உள்ளிட்ட முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதான் தொண்டர்களின் விருப்பம், சட்டப்படி அது செல்லத்தக்கது என்ற தீரப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளின்படிதான் இந்த பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்தவுடன் இதுகுறித்து விரிவாக பேசுவோம், எனக் கூறினார்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!