21 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணம்… இடைத்தேர்தலில் வாரி இறைக்கும் திமுக : இபிஎஸ் விளாசல்..!!
Author: Babu Lakshmanan18 February 2023, 11:19 am
திமுக 21 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தைக் வைத்துக்கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதால், மக்கள் திமுகவிற்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என கேட்டு கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவை ஆதரித்து மூன்றாவது நாளாக தொகுதிக்கு உட்பட்ட ராஜகோபால் திட்டம், மோசிகீரனார் வீதி, வண்டியூரான் கோவில் உள்ளிட்ட இடங்களில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்திற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியர்களுக்கு திமுக தான் பாதுகாப்பு அரணாக உள்ளது போன்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் வரும் போது மட்டுமே திமுவினருக்கு சிறுபான்மை மக்கள் தெரிவார்கள், என்றார்.
தொடர்ந்து அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்ட அவர், அதிமுக ஆட்சியில் ஈரோட்டிற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார். ஆனால் அதிமுக சிறப்பு திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் திமுக முடக்கி விட்டு எந்த திட்டத்தை கொண்டு வரவில்லை என திமுக பொய் பரப்பி வருகிறது எனக் கூறினார்.
திமுக தற்போது 21 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என்று களம் இறங்கி உள்ளது என்று கூறிய அவர், இந்த இடைத்தேர்தல் மூலம் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேர்தல் விதிமீறல்கள் குறித்து இதுவரை புகார் கொடுத்தும் எவ்வித பயன் இல்லை, என்றார்.
தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பின் ஒரு பேச்சு, இது தான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
0
0