திமுக ஆட்சியில் நெசவாளர்களின் நிலை படுமோசம்… தறிகளை எடைக்கும் போடும் அவலம் ; இபிஎஸ் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan27 October 2023, 3:41 pm
விடியா திமுக ஆட்சியில் கைத்தறி, விசைத்தறி தொழில் புரிபவர்கள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்தார். இதன் ஒரு பகுதியாக அதிமுகவின் 52 ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு காங்கேயம் நகர கழகம் சார்பில் நகரச் செயலாளர் வெங்கு மணிமாறன் ஏற்பாட்டில் காங்கேயம் பேருந்து நிலையம் அருகில் 52 அடி உயர கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதையடுத்து அவர் பேசியதாவது:- விடியா அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. தற்போது வரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த பகுதி நெசவு வேளாண் தொழில் அதிகமாக உள்ளது. தற்போது திமுக பொறுப்பேற்றதிலிருந்து இந்த தொழில் செய்பவர்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். மேலும், கொப்பரை விலை அதிமுக ஆட்சியில் ஏற்றி கொடுக்கப்பட்டது.
மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண் துறை சிறப்பாக இருந்தது. திமுக 2 லட்சம் பம்ப் செட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். அந்தளவிற்கு மின் தடை உள்ளது. நெசவாளர்கள் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி விசைத்தறி தொழில் புரிபவர்கள் நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் தற்போது விடியோ திமுக ஆட்சியில் விவசாயம், நெசவு அழிந்து விட்டது. எனவே, இந்நிலை மாற வருகின்ற நாடாளுமன்ற நாடாளுமன்ற அதிமுகவிற்கு வாக்களியுங்கள். விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப அடித்தளம் இடுங்கள், என்று பேசினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், அதிமுக தலைமையின் நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை.கே. ராதாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரருமான மகேந்திரன், முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், நடராஜன், காங்கேயம் நகரச் செயலாளர் கெங்கு மணிமாறன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.