திமுகவுக்கு பயம் வந்திருச்சு… இனிமேல் தான் எங்க ஆட்டமே ; எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..

Author: Babu Lakshmanan
23 February 2023, 2:37 pm

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் RB.உதயகுமார் மகளின் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டும், அதிமுகவின் 51வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு 51 ஏழை, எளிய ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணமாக அம்மா பேரவை செயலாளர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் 51 ஜோடிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயாகுமரின் மகளும் ஒருவராவர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே T.குன்னத்தூர் அம்மா கோவில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திருமண மேடை, மொய் எழுதுமிடம், உணவு அருந்துமிடம் என அமைக்கப்பட்ட விழாவிற்கு சேலத்திலிருந்து சாலை மார்கமாக வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி T.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் 10.30 வருகை தந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கல சிலைகளுக்கு மாலை அணிவித்து 51 ஜோடிகளுக்கு தனது கரங்களில் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மாவட்ட செயலாளர்கள், அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வில் குறைந்தபட்சம் 50,000 பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், உணவு அருந்துவதற்க்கு 6 இடங்களில் அமைக்கப்பட்டு தொடர்ந்து காலை 7.00 மணி முதல் பந்தி பரிமாறப்பட்டு வருகிறது.

அதே போல் மொய்-டெக் என்ற பெயரில் 102 கணினி மற்றும் பணம் என்னும் இயந்திரத்துடன் மொய் எழுதும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்று இந்த திருமண விழா நடைபெற்றது. புது திருமணமான 51 ஜோடிகளுக்கும் கல்யாண சீர்வரிசையாக 1 லட்சம் மதிப்பிலான கட்டில், பீரோ, பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்குகின்றனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசியதாவது :- இன்றைக்கு அதிமுகவின் 51வது பொன்விழாவை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் சமத்துவ சமுதாய திருமணவிழா நடைபெறுகிறது. தீர்ப்பு வருவதை முன்னிட்டு நான் நேற்று கலங்கி போயிருந்தேன், அச்சத்துடன் இருந்தேன் தீர்ப்பு எவ்வாறு வரும் என்பதை எண்ணி இரவு முழுவதும் எனக்கு தூங்காமல் இருந்தேன். நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்.

ஆனால் இன்றைக்கு அம்மா கோவிலில் வேண்டிய சில நிமிடத்தில் நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறார். அம்மாவின் ஆன்மவாக அம்மா கோவிலில் நம் தலைவர்கள் உண்மையான தெய்வமாக குடிகொண்டுள்ளது. தொடர்ந்து, இதுவரை எங்களை வைத்து லாபம் பார்த்த ஊடகங்கள் அனைவரும் இனிமேலாவது நாட்டுமக்களுக்கு நல்ல செய்திகளை வழங்குங்கள். அதிமுகவை பொறுத்தவரை நல்லது செய்கின்ற இயக்கம் அதிமுக இருக்கிறது.

அதிமுகவை அடக்க முடக்க நினைத்த எட்டப்பர்கள், திமுகவிற்கு B டீமாக இருந்தவர்கள் முகத்திரை தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கிழிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் அதிமுக இயக்கம் தொண்டர்களின் தலைமையின் கீழ் இயங்கும். அதிமுக மக்களுக்காக உழைக்கும் இயக்கம், ஒரு குடும்பத்திற்காக உழைக்கும் இயக்கமல்ல.! ஊடகங்கள் அதிமுகவிற்கு துணை நிற்க வேண்டும்.

தெய்வ சக்தி உள்ள கோவில் அம்மா கோவில். தீர்ப்பின் மூலம் தெய்வ சக்தி உள்ள கோவில் என உறுதி செய்யப்படுகிறது. தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக இன்றைக்கு திமுக மக்களை அடைத்து வைத்தது ஜனநாயக துரோகம் செய்து வருகிறது. திருமங்கலம் ஃபார்முலா நடைபெற்ற இடத்தில் இருந்து பேசுறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக மட்டுமல்லாது இந்தியாவிலேயே யாரும் செய்யாததை திமுக அரசு வாக்காளர் மக்களை அடைத்து வைத்துள்ளது.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் உயிருக்கு இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உயிரூட்டப்பட்டுள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் அதிமுக தொண்டர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அதிமுகவின் வீரத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவின் தொண்டர்கள் சொந்த காலில் நிற்கிறார்கள்.

அதிமுகவை வீழ்த்த வேண்டுமென ஸ்டாலின் எத்தனையோ முறை அவதாரம் எடுத்தார்.! அனைத்தும் அதிமுக தொண்டர்களால் நிறுத்தப்பட்டது. மாநில மத்திய தேர்தல் ஆணையத்திடமும்., மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டது யாரும் எதுவும் தடுக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை மக்கள் விரோத செயல்.

ஆடுகளை அடைத்து வைப்பது போல் வாக்காளர்கள் அடைக்க வைத்து அவர்களுக்கு தேவையானதை அனைத்தும் செய்து கொடுத்து வாக்கு சேகரிக்கிறீர்கள். வாக்காளர்கள் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள். வாக்காளர்கள் தான் நீதிபதிகள் நாங்கள் அவர்களை நம்புகிறோம். ஆறு மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் வாக்காளர்களை அடைத்து வைத்து சித்தரவதை செய்கிறார்கள், என தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :- திருமண விழாவில் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தின் சார்பில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதி., உண்மை இன்றைக்கு வென்றது.

அதிமுகவை பொறுத்தவரை OPS -க்கு எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தான் உச்சநீதிமன்றம் சென்றார் ஆனால், இன்றைக்கு உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் இன்றைக்கு நிறைவேறி உள்ளது. மீண்டும் அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வரலாம் என கேட்டதற்கு, நாங்கள் ஏற்கனவே அதிமுகவிற்கு உழைத்தவர்கள் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஒரு சிலரை தவிர, யாராக இருந்தாலும் சேர்ப்போம், என்றார்.

ஏற்கனவே, 4 வருடம் 2 மாதம் பொற்கால ஆட்சியை நான் வழங்கியுள்ளேன். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூட அன்றைக்கு பல கருத்துக்களை தெரிவித்தார். ஒரு மாதம் அல்லது 3 மாதத்தில் இந்த ஆட்சி கலைந்து விடும். ஆனால், 4.2 ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சிகள் வழங்கினோம், என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வெற்றி என்ற செய்தி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இன்றைக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்து விட்டதால் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிற திமுக அரசு, இதுவே எங்களுக்கு வெற்றி.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடி ஆகும் என்பதால் ஓபிஎஸ் மகன் நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான். பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் படி ஓபிஎஸ் அவரது மகனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான், எனக் கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 500

    0

    0