ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவிற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதிலடி கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளமான ட்விட்டரை ‘ஒரு வார்த்தை ட்வீட்’ ஆக்கிரமித்து ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் பலரும் தங்களுடைய கொள்கைகள், பணிகள், விருப்பங்கள், பிடித்த விஷயங்களை என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒற்றை வார்த்தை ட்வீட் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்ட பலரும் தங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ஒரு வார்த்தை டுவிட்டில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினரிடையே வார்த்தை போரை உண்டாக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தமிழ்நாடு’ எனக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் ‘தொண்டர்கள்’ என பதிவிட்டு அனல் பறக்கவிட்டார். அவரது இந்தப் பதிவை ஓபிஎஸ் தொண்டர்கள் டிரெண்டாக்கி வந்தனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த டுவிட்டிற்கு இபிஎஸ் தரப்பினர் பதிலடி கொடுத்திருப்பது இன்னமும டுவிட்டரை அதகளப்படுத்தியுள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்தியன், ‘அண்ணா, தங்களால் ஏமாற்றப் பட்டவர்கள்!!’ என்று பதிவிட்டு உள்ளார். இதனை தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்கள் இணையதளம் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.