பரபரப்பான சூழலில் சபாநாயகரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்… ஓபிஎஸ் இருக்கை குறித்து முறையிட இருப்பதாக தகவல்!!
Author: Babu Lakshmanan10 January 2023, 8:36 am
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவுவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. அரசின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து விட்டதாக சட்டப்பேரவையில் பெரும் களேபரமே நடந்தது. ஆனால், திமுக அரசின் செயல்பாட்டை கண்டித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்த கூட்டத்தில் சட்டசபையில் என்னென்ன பேசவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து பேச அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நேற்று எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்த நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க இந்த கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்தப்பட உள்ளது. எனவே, இதுகுறித்து சபாநாயகரை இன்று சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை, அதிமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்காவிட்டால், அவருக்கு எதிராக குரல் எழுப்ப எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
0