விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டையா…? அதிமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் ; எச்சரிக்கும் இபிஎஸ்!!
Author: Babu Lakshmanan21 December 2023, 7:47 pm
திட்டக்குடியில் விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒருசில மாதங்களுக்கு முன்பு, சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை இந்த திமுக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது.
கடந்த ஒரு மாத காலமாக அரசு அதிகாரிகள் மேற்படி கிராமங்களில் உள்ள நிலங்களில் ஆய்வு என்ற பெயரில் வந்து செல்வது, அளவீடு செய்வது போன்றவை அப்பகுதி விவசாயிகளிடையே மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இக்கிராமங்களில், மானாவரி வகைப்பாடாக இருந்த நிலங்களை, அப்பகுதி விவசாயிகள் தங்களது ரத்தத்தை வியர்வைகளாக சிந்தி, நூறடி ஆழத்துக்கு மேல் கிணறுகள் வெட்டி, பாசன வசதி ஏற்படுத்தி, அரும்பாடுபட்டு நிலங்களை பண்படுத்தி இன்று அந்நிலங்களை முப்போகம் விளையக்கூடிய நிலங்களாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.

உண்மையில் தொழிற்பேட்டை அமைத்து அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென்றால், ஏற்கெனவே 10 கி.மீ. தொலைவில் விளம்பாவூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையை முழு அளவுக்கு பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாகும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, மூன்று தொழிற்பேட்டைகள் அருகருகே உள்ள நிலையில், புதிதாக 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்க நினைக்கும் இந்த விவசாய விரோத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியில் மக்கள் விரோத திமுக அரசு முனைந்தால், பாதிப்படையும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும்; எனவே, இப்பகுதி விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை கைவிடுமாறு இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.