அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் 3.21 கோடி மதிப்பில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்தார்.
இதில் சேலம் எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி ஜலகண்டாபுரம் கொங்கணாபுரம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், நங்கவள்ளி, காடையாம்பட்டி ஆகிய மூன்று ஒன்றியங்கள் என பல்வேறு பகுதிகளில் 3.21 மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில், “சேலம் எடப்பாடி தொகுதி மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் சேலம் எடப்பாடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது. எடப்பாடி தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளோம்,” தெரிவித்துள்ளார்.
சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையும் படியுங்க: இந்த பாலா…
நிறைவேறாத கூட்டணி பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும்…
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி…
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…
This website uses cookies.