பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ.. கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி : சிபிஐக்கு போன பரபரப்பு புகார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 ஏப்ரல் 2023, 12:55 மணி
EPS PTR - Updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோவில் உண்மைத்தண்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை என அமைச்சர் பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அதை எதிர்த்து அண்ணாமலை சவால் விட்டிருந்தார். அதே போல ஆளுநரிடம் இது குறித்து தமிழக பாஜக குழு புகார் அளித்திருந்தது.

இந்த நிலையில்தான் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வழக்கறிஞர் பாபுமுருகவேல், தமிழ்நாடு மற்றும் மத்திய விஜிலென்சான சிபிஐ , அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு நேற்று ஒரு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்த கடித்ததில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகவும், அந்த குரல் பதிவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பெருமளவில் பணம் சேர்த்து விட்டதாகவும் கூறப்பட்ட ஆடியோவை பற்றி விலாவரியாக குற்றச்சாட்டுகளோடு குறிப்பிட்டு இருக்கிறாராம்.

மேலும் அந்த கடிதத்தில், பிடிஆரின் குரல் பதிவின் தொடர்ச்சியாக இருப்பதைப் போல மேலும் ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் நேற்றில் இருந்து பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் குற்றம் சுமத்தப்படும் நபர் ஒரு தமிழ்நாட்டினுடைய அமைச்சர், குற்றத்தை சொல்பவரும் தமிழ்நாட்டினுடைய அரசாங்கத்தினுடைய ஒரு அமைச்சர்.

எனவே இதனுடைய உண்மை தன்மையை கண்டறிந்து இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார். இதே புகார் மனுவை கவர்னரை சந்தித்து தரப்போவதாக ஏற்கனவே எடப்பாடி சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 451

    0

    0