எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு.. நான் பேசியதில் எந்த தவறும் இல்லை : நீதிமன்றத்தில் உதயநிதி காரசார பதில்!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு.. நான் பேசியதில் எந்த தவறும் இல்லை : நீதிமன்றத்தில் உதயநிதி காரசார பதில்!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனம் குறித்த புரிதல், கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் நிலைப்பாடு, கவர்னருடன் நட்பு ஆகியவற்றை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார்.

இது தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வழக்கு தொடரப்பட்டது. மேலும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரிக்கை வைத்திருந்தார். ந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவித்தேன்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தங்கள் தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதனால் இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது.

கொடநாடு சம்பவம் நடந்தபோது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொது நலன் அடிப்படையில் கருத்து தெரிவித்தேன்.

எனவே, எனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பதில் மனுவில் கோரியிருக்கிறார்.இந்த வழக்கு விசாரணையின்போது, உதயநிதி ஸ்டாலினின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26-ந் தேதிக்கு நீதிபதி என்.சதீஷ் குமார் தள்ளிவைத்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

18 minutes ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

23 minutes ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

1 hour ago

தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை… . மேலிடம் சொல்வதை செய்வேன் ; அண்ணாமலை அறிவிப்பு!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…

1 hour ago

10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த 50 வயது முதியவர்.. சிறிது நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…

2 hours ago

அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

This website uses cookies.