எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் மூவ்.. அதிமுகவுக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம் : தொண்டர்கள் உற்சாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2023, 2:31 pm

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவியது.

இதையடுத்து கடந்த கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டது. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளர் பதவி உட்பட ஜூலை11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

  • director told vadivelu a single word so he leave shooting with angry டைரக்டர் சொன்ன அந்த ஒரு வார்த்தை; கும்பிடுபோட்டு பாதியிலேயே கிளம்பிய வடிவேலு!