மொத்த கூடாரமும் காலி… எடப்பாடி பழனிசாமி போட்ட ஸ்கெட்ச் : அதிர்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன்!!!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2023, 9:59 am
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் என அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் தீவிர சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அதிமுக வாங்கு வங்கிகள் சிதறி கிடக்கும் நிலையில் அதனை ஒன்றுபடுத்தும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகளை தங்கள் அணிக்கு இணைக்கும் பணியில் தீவிரமாக எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து டிடிவி மற்றும் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொருளாளர் G.E. அன்புமணி, மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் S.ரவிநாட்டார், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் E. திருமலை, மாவட்ட மாணவர் அணித் தலைவர் M. மலர்வண்ணன்; தே.மு.தி.க-வைச் சேர்ந்த, செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் K. சிவகுமார், கிளைச் செயலாளர்களான R. சுதாகர், திரு. சேகர், ஊராட்சிச் செயலாளர் திரு. P. ராஜவேல், இளைஞர் அணிச் செயலாளர் திரு. E. வெங்கடேசன் மற்றும் தி.மு.க. கிளைச் செயலாளர் திரு. ஏழுமலை உள்ளிட்ட அக்கட்சிகளைச் சேர்ந்த 150 பேர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
இதே போல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் A. கணேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் T. ராவணன்; ஓ. பன்னீர்செல்வம் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஆலத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினருமான A. சிவராஜ். ஒன்றிய இணைச் செயலாளர், S. அருண், மேலமைப்புப் பிரதிநிதி திரு. R. கதிரேசன், கிளை பொருளாளர் DSR. செந்தில், இரூர் ஊராட்சிச் செயலாளர் திரு. G. செல்வம், கிளைச் செயலாளர்களான M. செல்வம், . A. கனகராஜ், திரு. S. முத்துச்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் 50 பேர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.