ED வைத்த செக்… மணிஷ் சிசோடியாவின் காவல் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan6 April 2024, 1:54 pm
ED வைத்த செக்… மணிஷ் சிசோடியாவின் காவல் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா.
இந்த சூழலில் டெல்லியில் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக சிசோடியா மீது குற்றம்சாட்ட நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதையடுத்து பல்வேறு விசாரணைகளுக்கு பிறகு நீதிமன்ற காவலில் மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடைய ஜாமீன் கோரி பல முறை மனுதாக்கல் செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 18ம் தேதி வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேசமயம் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மாதம் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.