10 ஆண்டுகளில் கல்வி தலைகீழாக மாறப் போகிறது : தனியார் பள்ளி விழாவில் அண்ணாமலை தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2023, 11:34 am
புதிய கல்விக் கொள்கை மூலம் 10 ஆண்டுகளில் கல்வியை தலைகீழாக பிரதமர் மாற்றிக் காட்டுவார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதன் பின்னர் பேசிய அவர், ஆங்கிலேயர் மதிபெண்களை வைத்து மாணவர்களின் திறமைகளை அளவிடும் மெக்காலே கல்வி திட்டத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இந்த மெக்காலே கல்விக் கொள்கையை புதிய கல்விக் கொள்கை மூலம் பாரத பிரதமர் மோடி உடைத்தெரிருப்பதாகவும், புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே குழந்தைகளின் தனி திறமைகள் வெளிப்படும் என அண்ணாமலை பேசினார்.
புதிய கல்விக் கொள்கையை வேண்டாம் என நினைத்தாலும், சில அரசுகள் அதை தடுக்க நினைத்தாலும், கல்வியை இன்னும் 10 ஆண்டுகளில் புதிய கல்விக் கொள்கை மூலம் மோடி அவர்கள் தலைகீழாக மாற்றிக் காட்டுவார் என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை சுவரஷ்யமாக் சில பதில்களை அளித்தார். ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு, சிறு வயதில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போல் ஆக ஆசை இருந்தாகவும், பெரியவனாக ஆன பின் சமுதாயத்தில் சாதனை செய்த அனைவரும் தனக்கு ரோல் மாடலாக இருப்பதாகவும் அந்த வகையில் நிறைய ரோல் மாடல்களில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக தான் வாழ்க்கையை கற்று வருவதாக தெரிவித்தார்.
வகுப்பில் கடைசி பெஞ்ச் மாணவன் இல்லையென்றும், கடைசி பெஞ்ச்க்கு முந்தை பெஞ்ச் மட்டுமே தன்னுடைய இருக்கையாக வகுப்பில் இருந்துள்ளதாகவும், லாஸ்ட் பெஞ்சில் இருந்தால் தான் விசாலமான பார்வை கிடைக்கும் எனவும் சுவரஷ்யமாக பல பதில்களை மாணவர்களுக்கு அளித்தார்.