காலியான 12 மாநிலங்களவைக்கு தேர்தல்.. தேதி அறிவிப்பு : தயாராகும் எம்பிக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
7 ஆகஸ்ட் 2024, 4:12 மணி
mani
Quick Share

மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றனர்.

தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக அசாம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி நிறைவடையும் என்றும் வேட்புமனு பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மாநிலங்களவை தொகுதிக்கும் தனித்தனியாக செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 70

    0

    0