உங்க குடும்பத்தினருக்கு தனித்தனி மின் இணைப்பா..? வந்தது புதிய சிக்கல்… தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு!!

Author: Babu Lakshmanan
7 March 2023, 4:33 pm

சென்னை : ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றம் செய்யும் தமிழக மின்சார வாரியத்தின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழக மின்சார வாரியத்தின் பயனாளிகளின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை ஏறத்தாழ 98 சதவீதம் பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் இந்த செயலின் மூலம் 100 யூனிட் இலவச மின்சாரம் தடைபடுமா..? என்று பொதுமக்களுக்கு சந்தேகமும், அச்சமும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், வீடுகளில், ஒரு குடும்பத்தில் அல்லது குடியிருப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரே மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும். ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகிதப் பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும்.

EB bill - updatenews360

நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராவிட்டால் அதனை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். மேலும் மின் வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்தப் பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

சிலர் ஒரே வீட்டில் தனித் தனிக் குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் இதுபோன்ற குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால் அங்கு தனி ரேஷன் அட்டை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதன் நோக்கம் என்னவென்றால் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே.

குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக உள்ள மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1-ஏ கட்டண விகிதப் பட்டியலாக இருக்க வேண்டும்.

இதுகுறித்து தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- இது முற்றிலும் அநியாயம்! வீட்டில் எத்தனை குடும்பங்கள் இருந்தாலும் ஒரே மின் இணைப்புதான் என்ற மின்சார ஆணையத்தின் ஆணை அட்டூழியமானது. திட்டமிட்டு சாதாரண மக்களை கொள்ளையடிக்கும் முயற்சி. தமிழக அரசு, அமைச்சர் செந்தில்பாலாஜி, முதலமைச்சர் ஸ்டாலின், மேல்முறையீடு செய்யவேண்டும்.இதை அமல்படுத்தக்கூடாது, என தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 493

    0

    0