பாஜக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை : தூத்துக்குடியில் பரபரப்பு.. திரண்ட பாஜகவினர்!!
Author: Udayachandran RadhaKrishnan23 March 2023, 11:03 am
பாஜக மாநில பட்டியல் பிரிவு அணி பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் ரெய்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகரில் பாஜக மாநில பட்டியல் பிரிவு அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன் என்பவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மூன்று அலுவலர்கள் அவர் வீட்டில் உள்ளே ஆய்வு நடத்தி வருகின்றனர். பாஜகவினர் வீடு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னணியில் முறைகேடான பணம் தொடர்பான வழக்கு ஒன்றில் சிவந்தி நாராயணனுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முழுமையான தகவலை கூற மறுத்துவிட்டனர். தொடர்ந்து நடந்து வரும் விசாரணைக்கு பின் முழுமையான காரணம் தெரியவரும்.