பெண் அதிகாரி மீது தாக்குதல் முயற்சி; கைதாவாரா திமுக பிரமுகர்? சிவகங்கையில் பரபரப்பு

Author: Sudha
27 July 2024, 12:58 pm

சிவகங்கை அருகே உள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர், கான்ட்ராக்டர் ஆக உள்ளார். பெருங்குடி ஊராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முருகன், பணி முடிந்துவிட்டதாகவும், பணத்தை விடுவிக்குமாறும், பணியிலிருந்த ஊராட்சி மன்ற உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம் நேற்று கேட்டுள்ளார்.

பணி அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறு உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரி தெரிவித்ததால், முருகன் கோபமடைந்து வாக்குவாதம் செய்தார்.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகன், அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்து, கிருஷ்ண குமாரியைத் தாக்க முயன்றார். அலுவலக ஊழியர்கள் முருகனை தடுத்து வெளியே அழைத்து வந்தனர்.

காண்ட்ராக்டர், பெண் அதிகாரியை தாக்க முயன்றதைக் கண்டித்தும், தாக்க முயன்ற முருகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமாரி இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!