கிட்டயே நெருங்க முடியாது : டெஸ்ட் கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்த இங்கிலாந்து அணி!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2024, 5:15 pm

ஒரே டெஸ்ட் போட்டியில் 2 வரலாற்று சாதனையை படைத்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன்களக்க ஆல் அவுட் ஆனது.

இதில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதில் ஹரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மூன்று சதத்தை அடித்த சாதனையை படைத்தார் ஹாரி புரூக்.

310 பந்துகளில் மூன்று சதம் அடித்ததால் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2 வது டெஸ்ட் முச்சத்ம் இதுவே. விரேந்திர சேவாக் 278 பந்துகளில் முச்சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல 823 ரன்களை குவித்து இங்கிலாந்து அணி 3வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளுது. ஏற்கனவே ஆஸி.க்கு எதிராக 903 ரன்களும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 849 ரன்களும் அடித்துள்ளது இங்கிலாந்து.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 840

    0

    0