சூடா ஒரு டீ சொல்லுப்பா… சாலையோர தேநீர் கடையில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த இபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 2:51 pm

சூடா ஒரு டீ சொல்லுப்பா… சாலையோர தேநீர் கடையில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த இபிஎஸ்!!

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பெற்ற சட்டமுன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் விதமாக நேற்றைய தினம் தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, பாதியிலேயே வெளிநடப்பு செய்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லம் திரும்பினார். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை சென்னையிலிருந்து சேலத்துக்கு புறப்பட்டார்

ரயில், விமானப் பயணங்களை தவிர்த்து சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக தனது இன்னோவா காரில் பயணித்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தடைந்தார்.

முன்னதாக சேலம் புறநகரில் உள்ள சாலையோர தேநீர் கடைக்கு சென்ற அவர், சூடா ஒரு டீ சொல்லுப்பா என தேநீர் வாங்கிக் குடித்தார். அவருடன் சேலம் இளங்கோவன் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரும் காரில் ஒன்றாக பயணித்தனர்.

ஜாலியாக, ரிலாக்ஸாக பேசிக்கொண்டே எடப்பாடி பழனிசாமி டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 5 நிமிடத்தில் மாறி மாறி அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் அங்கிருந்தவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அதனை எடப்பாடி பழனிசாமியின் பி.எஸ்.ஓ.க்கள் தடுக்கவில்லை. தேநீர் குடித்த பிறகு கார் ஏறச் சென்ற எடப்பாடி பழனிசாமியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அங்கிருந்த பலரும் ஆர்வம் காட்டினர்.

தனது பயணக் களைப்புக்கு மத்தியிலும் புன்னகையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுத் தான் கார் ஏறச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. பொதுவாக தேர்தல் பிரச்சாரக் காலங்களில் தான் இது போன்ற திடீர் சர்ப்ரைஸ்களை எடப்பாடி பழ்னிசாமி கொடுப்பார்.

நேற்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இவ்வாறு திடீர் விசிட் அடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!