அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்? மூத்த நிர்வாகிகளுடன் போட்ட மாஸ்டர் பிளான்!!
Author: Udayachandran RadhaKrishnan6 March 2023, 12:01 pm
அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 10 ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
9ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தொடர்ச்சியாக 10 ஆம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டவுடன் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
தேர்தலுக்கு பிறகு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுச் செய்யப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.