புதிய பதவி பொறுப்பேற்றதும் முதன்முறையாக டெல்லி பயணம் : பிரிவு உபசார விழாவில் பங்கேற்ற பின் பிரதமரை சந்திக்கும் இபிஎஸ்?!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 10:55 am

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி டில்லி புறப்பட்டார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, பாஜக கூட்டணியான, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில், டில்லியில் இன்று பிற்பகல், பிரிவு உபசார விழா நடக்கிறது.

இதில் கலந்து கொள்ள பாஜக தலைமை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக எதிர் கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். ஆனால் ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu