பேய்க்கு வாக்கப்பட்டால்…. கையிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 8:49 pm

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தஸ்தகீா் – அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிா். தலையில் நீா் கோா்த்தல் பிரச்னை இருந்ததால் குழந்தை முகமது மகிரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அண்மையில் பெற்றோர்கள் அனுமதித்தனர்.

அங்கு, குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு ட்ரிப்ஸ் போடப்பட்ட வலது கை கறுப்பாக மாறியதுடன் செயலிழந்து, அழுகி உள்ளது. இதனைத் தொடர்ந்து எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததே கை அகற்றும் நிலைக்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் புகாரளித்துள்ளனர்.

இந்நிலையில், கையிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், ஒரு கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிருக்கு இனியாவது முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும்; எதிர்காலத்தை இழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும்; தவறிழைத்த மருத்துவப் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு மருத்துவமனையையே நம்பி இருக்கும் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை இந்த திமுக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 370

    0

    0