இது #MakeinTamilnadu தான்..ஆனா #MadebyAmmaArasu : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு REMIND செய்து பஞ்ச் அடித்த இபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 8:38 pm

உலக அளவில் டிஜிட்டல் சாதன பயனர்களிடையே பிரபலமானது, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள். செல்போன், லேப்டாப் என பல சாதனங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை ஆப்பிள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதனை ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்தப் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன்களின் பழைய மாடல் போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களுக்காக இந்தியாவிலேயே இந்த போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளுக்கு இப்போதைக்கு இது ஏற்றுமதி செய்யப்படாது எனவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன்கள் தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் அதிமுக ஆட்சி காலத்தில போடப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அம்மா அரசு ஆட்சியிலேயே போடப்பட்டது ஆனால் வழக்கம் போல் இதையும் தங்கள் சாதனை போல காட்டி கொள்ள முயலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்.

இது #MakeinTamilnadu (மேக் இன் தமிழ்நாடு) தான் ஆனால் #MadebyAmmaArasu (மேட் பை அம்மா அரசு) எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலேயே 2019 ஆம் வருடம் ஒப்பந்தம் போடப்பட்டு 2020 ஆம் ஆண்டே பாக்ஸ்கான் நிறுவன ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பை சென்னையில் உற்பத்தி செய்யும் பணியை துவங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ