கோயில்களின் கருவறைக்குள் சமத்துவத்தை காட்ட வேண்டும் : முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 11:37 am

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்

பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதன்முறையாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டின் நுழைவு வாயிலை அமைச்சர்கள் பெரியசாமி , சக்கரபாணி , சேகர் பாபு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்

அதனைத் தொடர்ந்து ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாட்டின் கொடியினை ஏற்றி வைத்தார் , ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி மாநாட்டின் கண்காட்சியினை தொடங்கி வைத்து விர்ச்சுவல் ரியாலிட்டி VR தொழில்நுட்ப அரங்கில் விஆர் கண்ணாடியை அணிந்து அதில் முருகனின் அறுபடை வீட்டை நேரில் சென்று தரிசிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தில் கண்டு ரசித்தனர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் வரலாற்று சிறப்புகள் 3d வடிவமைத்த பக்தி பாடல்கள் கண்காட்சியையும் பார்வையிட்டனர்

அதனைத் தொடர்ந்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடக்கி வைத்து உரையாற்றினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்,கோயில்களின் கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும், அதில் உயர்வு தாழ்வு என்பதில்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திமுக அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை என்றும்

அனைவரது நம்பிக்கைகளுக்கும் நன்மை செய்யும் அரசாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!