கோவை வழியே இன்னொரு வந்தே பாரத் ரயில்… இனி பெங்களூருக்கும் போலாமா? பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

Author: Sudha
31 July 2024, 12:24 pm

எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் கூடுதலாக ஒரு நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளம் – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் திருச்சூர், பாலக்காடு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதலாக கிருஷ்ணராஜபுரத்தில் நிறுத்தம் வழகப்பட்டுள்ளது.

ரயில் எண் 06601 எர்ணாகுளம்-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு 9.05 க்கு வந்து 9.07 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 06602 பெங்களூரு கன்டோன்மென்ட் -எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்துக்கு 05.40 க்கு வந்து 05.42 மணிக்கு புறப்படும்.இந்த மகிழ்ச்சியான செய்தியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!