வெறும் 1 வாக்கு மட்டுமே வாங்கிய 7 வேட்பாளர்கள்… பூஜ்யம் வாக்குடன் களத்தில் இருக்கும் வேட்பாளர் : ஈரோடு இடைத்தேர்தலில் ‘கலகல’!!

Author: Babu Lakshmanan
2 March 2023, 3:51 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7 பேர் வெறும் ஒரு வாக்குகள் மட்டுமே வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், இதுவரை 9 சுற்றுகள் முடிந்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளரை விட 45,314 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 24,985 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதில் 7 வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதிலும், 73வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!