வாக்காளர் பட்டியலில் முறைகேடு..? பற்ற வைத்த அதிமுக ; டெல்லியில் இருந்து தேர்தல் அதிகாரிக்கு வந்த திடீர் உத்தரவு..!!
Author: Babu Lakshmanan16 February 2023, 10:52 am
டெல்லி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அளித்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என 79 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தல் விதிகளை திமுக மீறுவதாக அதிமுக சார்பில் அடுத்தடுத்து பல்வேறு புகார்களை அளித்து வருகிறது.
அந்த வகையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகார் மனுவில், ஈரோடு இடைத்தேர்தலில் வரும் 27 ல் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலையொட்டி வேறு பகுதியில் வசிக்கும் நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகவும், பல பெண்கள் பெயர்கள் 2 முறை இருப்பதாகவும் அதிமுக புகார் அளித்திருந்தது. மேலும் வாக்காளர் விவரம் விற்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா ஷாகுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.