தேர்தல் முடிவு திடீர் வாபஸ்..? வேட்பாளர் அறிவிப்புக்கு பின் நடந்த டுவிஸ்ட்.. அதிமுகவிடம் சரணடையும் தேமுதிக..!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 12:07 pm

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் இன்று சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

EVKS - Updatenews360

திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டுள்ளார். அதேபோல் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சிவபிரசாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரதான எதிர்கட்சியான அதிமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரி வருவதால், இதுவரையில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து, தேர்தலுக்கான வேளையில தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், பாஜகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், வேட்பாளரை அறிவித்து தேர்தலுக்கான போட்டியில் தேமுதிக களமிறங்கிய நிலையில், அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்க இருப்பதாக கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை அறிவித்து விட்டு, அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முக்கிய காரணமாக, அக்கட்சியின் வேட்பாளர் ஆனந்தன் தான் உள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர், அதிமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

EPS Plan - Updatenews360

இந்த தகவலை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை சுதீஷ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு, தேர்தலில் இருந்து விலகி அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

  • Maharaja release in china சீனாவில் மகாராஜா…. ரூ.700 கோடி சாத்தியமா? கொண்டாடும் ரசிகர்கள்!
  • Views: - 378

    1

    0