ஆளுங்கட்சியினர் அராஜகம்… ரொம்ப மிரட்டுறாங்க… நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் பரபரப்பு குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
2 பிப்ரவரி 2023, 8:00 மணி
Quick Share

ஆளும் கட்சியினர் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பணிமனை கூட அமைக்க முடியாமல் தவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் மேனகா நவநீதன் தனது கட்சியை சேர்த்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கைகளில் செங்கரும்பினை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த திருமகன் ஈ.வே.ரா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென மாநில தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுவதற்கான வேடபாளரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு பகுதியை சேர்ந்த மேனகா நவநீதன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.

இதனையடுத்து தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாம்தமிழர் கட்சியினர் கைகளில் செங்கரும்பினை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.

பின்னர், ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளும் கட்சியினர் அச்சுருத்தல் காரணமாக இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சி தற்போது வரை தேர்தல் பனிமனை கூட அமைக்க முடியாமல் தவிப்பதாகவும், ஈரோடு நகரில் வடமாநிலத்தவரின் கட்டுப்பாட்டில் உள்ள மஞ்சள் வணிகத்தை தமிழர்களின் கைகளுக்கு கொண்டுவர பாடுபடுவோம் என அவர் தெரிவித்தார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 421

    0

    0