கட்சியில் 1% கூட ஓபிஎஸ்க்கு ஆதரவில்லை : உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 11:27 am

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவு பெறுகிறது. முதல் நாளான நேற்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் எனக்கூறி ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

அதில் ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதம், தீர்மானங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்?

பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்ற ஈபிஎஸ்-ன் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை”

தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்கள் அனுப்புகிறது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தினை முன்வைத்தனர்.

இதன் பின் ஓபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்து, இபிஎஸ் தரப்பு வாதம் தொடங்கியது. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதே சமயம் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. ஓபிஎஸ்க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை என இபிஎஸ் தரப்பு வாதத்தை முன் வைத்து வருகிறது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 386

    0

    0