கோவையில் அண்ணாமலை தோற்றாலும் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : வானதி சீனிவாசன் உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 10:28 am
vanathi
Quick Share

இந்திய அளவில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் பாஜக தோல்வியையே சந்தித்தது.

தமிழகத்தில் பாஜகவின் தோல்வி குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” பாஜக தலைமையிலான NDA கூட்டணி 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ச்சியாக ஜனநாயக நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவது சவாலான விஷயம். அதனை NDA கூட்டணி நிகழ்த்தி காட்டியுள்ளது.

கோவை முடிவு எங்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வெற்றியோ தோல்வியோ அதனை ஏற்றுக்கொண்டு மக்கள் பணிகளை தொடர்வதை தான் பாஜக கற்றுக்கொடுத்துள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றபின்ன் கோவை தொகுதிக்கு என்னவெல்லாம் வாக்குறுதி கொடுத்தோமோ அதனை நிறைவேற்றுவோம்.

ராகுல்காந்தி பாஜகவுக்கு எதிராக பல்வேறு பொய்களை கூறினார். அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவார்கள். இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என பல பொய் பிரச்சாரம் செய்தனர். அதையும் மீறி ஆட்சியமித்துள்ளோம்.

40 தொகுதிகளிலும் ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும், அதனை வெற்றியாக மாற்ற முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Views: - 218

0

0