என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன்… ஆனால் : அதிமுக விமர்சனம் குறித்து அண்ணாமலை உருக்கம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2023, 2:56 pm

என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக்கொள்வேன்… ஆனால் : அதிமுக விமர்சனம் குறித்து அண்ணாமலை உருக்கம்!!!

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தனிக்கட்சி, தனிக் கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. சனாதன இந்து தர்மம் உறுதியாக உள்ளது; அதை யாராலும் அழிக்க முடியாது. சனாதன தர்மம் நிலைதிருக்கக் காரணம் சிவனடியார்கள்; இந்து தர்மம், சனாதன தர்மத்தை மீட்கும் வகையில் பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக் கொள்வேன்; ஆனால், எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விடமாட்டேன். அண்ணாதுரையை நான் தவறாக சொல்லவில்லை, சரித்திரத்தில் இருந்ததை எடுத்துக் கூறியிருக்கிறேன்.

நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக்கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்றொரு கட்சியை தாழ்த்திதான் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதில்லை.

நல்ல போலீசைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது. சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். அதைபோல எனக்கும் பேசத் தெரியும். சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு சார்பாக தீர்ப்பு வரும் என நம்புகிறேன். கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும். இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி