முதல்ல செங்கல், இப்போ முட்டை.. எல்லாம் வேஷம் : அமைச்சர் உதயநிதியை சரமாரியாக விமர்சித்த ஆளுநர் தமிழிசை!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 1:16 pm

முதல்ல செங்கல், இப்போ முட்டை.. எல்லாம் வேஷம் : அமைச்சர் உதயநிதியை சரமாரியாக விமர்சித்த ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து நீட்டுக்காக என்றுதான் சொன்னார்கள். அப்புறம் ஏன் அப்படி சொன்னாங்க? முதல் கையெழுத்தை நீட்டுக்குப் போட்டுவிட்டு தலையெழுத்தையே மாற்றுவோம் என்று சொன்னார்கள்… இன்று கையெழுத்தியக்கம் நடத்துறாங்க.

நான் இன்னொன்றையும் கேட்கிறேன்.. நீட் தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பு கொடுத்திருக்கு.. மற்ற நேரத்தில் எல்லாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு , உச்சநீதிமன்றம் தீர்ப்புன்னு சொல்றாங்க.. இதுவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனை எதிர்த்து ஒரு கையெழுத்தியக்கம் நடத்துகிறீர்களே.. அதுவும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு.. இதற்கு முன்னர் மத்திய அரசில் பல ஆண்டுகள் மத்திய அரசில் இருந்த போதும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதனால் நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் கண்துடைப்புதான்.

இன்னொன்று மறுபடியும் மறுபடியும் சொல்றேன்.. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அவநம்பிக்கையை தயவு செய்து ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து இதில் அரசியல் செய்யாதீங்க.. குட்டையை குழப்பாதீங்க.. முட்டை மார்க் வாங்கினா எல்கேஜியில் கூட சேர்க்க மாட்டாங்க.. எதையும் புரிஞ்சுக்காம முட்டையை காண்பிக்கிறது.. செங்கல்லை காண்பிக்கிறது என்பது எல்லாம் தேவையில்லாதது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!