சென்னை வந்த ஈவிகேஎஸ்க்கு திடீர் நெஞ்சுவலி.. உடல்நிலை எப்படி உள்ளது? வெளியான மருத்துவமனை ரிப்போர்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 8:20 am

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார்.

இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து நேற்று டெல்லி சென்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து விட்டு நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய சில மணி நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்ததால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த செய்தியை கேட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஈவிகேஎஸ் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து அவரை நேரில் சந்தித்து நலம் விரித்த காஞ்சிபுர மாவட்ட முன்னாள் செயலாளர் சிவராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.

சாதாரண நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவரை ஒருநாள் வைத்து பரிசோதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரடியாக சந்தித்து பேசினோம்.

இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்து விடுவோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அவருக்கு வீசிங் பிரச்சனை உள்ளது. இந்த நேரத்தில் ஏன் வந்தீர்கள், விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என எங்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவுக்கு அவர் தைரியமாக உள்ளதாக கூறினார்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 410

    0

    0