புதுக்கோட்டை ; நீட் விலக்கு மசோதாவில் கையொப்பமிட மாட்டேன் என்று கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்றத் தொகுதி ராயவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது :- ஆளுநரை தாண்டி இந்திய குடியரசு தலைவர் தான் நீட் விலக்க மசோதாவிற்கு கையெழுத்து போட வேண்டுமா..? வேண்டாமா..? என்று முடிவு செய்ய வேண்டும்.
மாநில ஆளுநரை தாண்டி போய்விட்டது. மாநில ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை தான் செயல்படுத்த மாட்டேன் என்று சொல்வதற்கு என்ன பெருமை. இவருக்கு அதிகாரமே கிடையாது. இல்லாத அதிகாரத்தை செயல்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார். இதற்கு அழுவதா..? சிரிப்பதா..? என்று தெரியவில்லை, என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம், வட்டார தலைவர்கள் ராம் அர்ஜுனன் கணேசன், திருமயம் வட்டாரத் தலைவர் முருகேசன், அக்பரலி மகுடமுடி மலைக்கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.