திமுகவின் 31 மாத ஆட்சியில் இல்லவே இல்லை… அதிமுக ஆட்சியமைந்தால் அது மீண்டும் நடப்பது உறுதி… வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்…!!
Author: Babu Lakshmanan19 December 2023, 12:50 pm
திமுக ஆட்சி பொறுப்பேற்று 31 மாதமாகியும் அரசு சார்பில் ஒருவரை கூட ஜெருசலம் புனித பயணத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மதுரவாயில் வானகரம் பகுதியில் அமைந்துள்ள ஜீசஸ் கால்ஸ் திருச்சபையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கோலாலமாக நடைபெற்றது.
அதிமுக அமைப்பு செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பெஞ்சமின் ஏற்பாட்டில், பல்வேறு திருச்சபைகளை சார்ந்த பேராயர்கள் கலந்து கொண்ட இந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அடங்கிய கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி விழாவினை துவங்கி வைத்தார்.
இந்த கிறிஸ்மஸ் பெருவிழா நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விழா மேடையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :- பொதுமக்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த அம்மா கிளினிக் மூடிய அரசுதான் இந்த விடியா அரசு. அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக், அம்மா மருந்தகம் என அனைத்தையும் மூடிய பெருமை இந்த விடியா அரசையே சாரும்.
அதுமட்டுமில்லாமல் கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த வேளையில், இந்த விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்கள் மீது பெரிய சுமையை போட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சொத்து வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு என அடுக்கடுக்காக வரியை அதிகரித்தனர். மேலும் இந்த திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு பாலியில் சீண்டல்கள் நடைபெற்று வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. இளைஞர்கள் கஞ்சா போதையில் தவறான வழிக்கு செல்கின்றனர் என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும், இரவு பகல் பாராமல் இரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் விவசாயிகள் மீது குண்டு சட்டம் போடும் அரசாகவும் இந்த திராவிட மாடல் அரசு விளங்குகிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பேற்று 31 மாதத்தில் கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு பயனும் அடையவில்லை. கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மையினர் மக்களுக்கு அரணாக விளங்குவது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என கூறிய அவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தான் முதல்வராக இருந்தபொழுது மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் அவர்கள் அடைந்த பயன்கள் குறித்து பட்டியலிட்டார்.
மேலும் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 31 மாதங்களில் ஒரு கிறிஸ்தவரை கூட புனித பயணத்திற்கு அவர்கள் அனுப்பவில்லை என்று குற்றச்சாட்டையும் முன்வைத்தார். மேலும், அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் ஒவ்வொரு ஆண்டும் ஜெருசலம் புனித பயண திட்டம் புத்துயிர் பெறும் என்றும், புனித பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை இரட்டிப்பார்க்கப்படும் என்னும் அவர் உறுதியளித்தார்.
0
0