“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொன்றது மோடிதான்… பாஜகவின் திட்டமிட்ட சதி” : திமுக எம்.எல்.ஏ. பகிரங்கக் குற்றச்சாட்டு!

Author: Babu Lakshmanan
7 January 2023, 1:10 pm

தூத்துக்குடி : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொலை செய்ததே பிரதமர் மோடி தான் என்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பகிரங்கக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய விளாத்திகுளம் (திமுக) சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் :- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அந்தக் கட்சியில் (அதிமுக) இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரை மோடிதான் கொன்றுவிட்டார். காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்க போவதாக கூறியதால் பாஜகதான் கொன்றுவிட்டது என்று பகிரங்கமாக தான் குற்றச்சாட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர், தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த வாக்குறுதி அனைத்தும் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu