இதுவரை அழைப்பு வரல…. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் ; விரக்தியில் ஓபிஎஸ் ; குழப்பத்தில் ஆதரவாளர்கள்…!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 10:44 am

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த போது, கர்நாடக அரசு அனைத்து கட்சி தீர்மானம் குறித்த கேள்விக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வது சட்டவிரோதம்.

காவேரி பிரச்சனையை தீர்ப்பதற்கு தான் காவிரி நடுவர் மன்றம் நிருவப்பட்டது. 17 ஆண்டுகளுக்குப் பின்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு வந்த பிறகு அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா இந்த நீர் பத்தாது, அப்போது திமுக ஆட்சி நடைபெற்றது நீரை உறுதிப்படுத்த வேண்டும் அதன் பின்பு இந்த நீர் பற்றாது என்று உச்ச நீதிமன்றத்தின் வழக்கு தொடுக்க வேண்டும் என்று அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருந்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்று துரைமுருகன் தெரிவித்தார்.

ஆனால் அதன்பின் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு வழங்கிய நீரை குறைத்து பெங்களூருக்கு கூடுதலாக நீர் வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு வழக்கு தொடுத்து 172 டிஎம்சி நீர் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உறுதிப்படுத்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காவிரி நடுவர் மன்றம் இது இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெறுவதற்கு உரிய முன்ன நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் பிறகு அதிமுக ஆட்சியில் தான் உச்சநீதிமன்றம் எடுத்த சென்று 10 தேர்வு மூலமாக இறுதி தீர்புக்கு அரசாணை பெற்று தந்தார். காவிரி நீர் முறைப்படுத்தும் ஆணையம் அமைக்க வேண்டும் அப்போது ஜெயலலிதா கேட்டுக்கொண்டார் அதனையும் உச்ச நீதிமன்றம் எடுத்துச் சென்றார். அதன் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைத்து நீண்ட நெடிய வரலாறு உள்ளது.

போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்ற கர்நாடக அரசு சொன்னால் இந்திய அரசியல் சட்டத்தை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் தமிழக மக்களால் இருக்கிறார்கள் திமுக அரசு இதை முறையான சட்டப் பிரச்சனை மூலமாகவோ அல்லது பேச்சு வார்த்தை மூலமாகவோ துரித நடவடிக்கை எடுத்து அம்மா பெற்று தந்த நீரை தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது, எனக் கூறினார்.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு: இதுவரை இல்லை.

சசிகலாவை சந்திப்பது குறித்த கேள்விக்கு: இதுவரை பார்க்கவில்லை, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

புரட்சிப் பயணம் மீண்டும் துவங்குவது குறித்த கேள்விக்கு ;- மீண்டும் தொடரும், எனக் கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்