சர்வாதிகாரியாக மாறும் முதலமைச்சர் ஸ்டாலின்.. 165 தொன்மை வாய்ந்த கோவில்களுக்கு ஆபத்து.. பொன் மாணிக்கவேல் பகீர்..!!

Author: Babu Lakshmanan
18 July 2023, 12:53 pm

தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுவதாக முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியதாவது:- தமிழகத்தில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோயில்களை அரசால் பராமரிக்க முடியவில்லையோ, அவற்றை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும். தமிழகத்திலிருந்து காணாமல் போன பத்தில் ஒரு மடங்கு சிலை தான் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது.

165 தொன்மை வாய்ந்த கோவில்கள் பராமரிக்க முடியாமல் அழியுற்ற நிலையில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுகின்றார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழக காவல்துறையில் சாட்சிகளுக்கு இந்த மரியாதை வழங்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பொய் சாட்சிகளை நம்பி காவல்துறை செயல்படுகிறது. எனது ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்பதில்லை. ஆலோசனை கேட்கும் அதிகாரிகள் தற்போது கிடையாது. ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தெய்வ விக்கிரகங்களை மட்டுமே அனைவரும் பொக்கிஷங்களாக பார்க்கின்றனர். ஆனால் அது தவறு, அங்கு உள்ள கல்வெட்டுக்கள் ஆகியவையும் பொக்கிஷங்கள் தான். இவைகள் தான் அடையாளம் கொடுப்பதை அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ, அடையாளம் கொடுப்பது கிடையாது. நிதிக்காக தான் அரசியல் கட்சிகள் சண்டை போடுகின்றன. 20% கமிஷனுக்காக அரசியல் கட்சிகள் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

சிதம்பரம் கோயில் மிக தொன்மையான கோயில் கனக சபை உள்ளிட்ட விவரங்களை நான் தலையிட விரும்பவில்லை. சிவனடியார்கள் மற்றும் பெருமாள் அடியார்கள் எங்கு இருக்கிறார்கள். அங்கு நான் செல்வேன். ஏனென்றால் அங்கு தான் ஆன்மிகம் உள்ளது.

மோசமான ஆட்கள் என்று காவல்துறையினர் பெயர் எடுத்து உள்ளோம். காவல்துறையினர் பெயர் பொதுமக்கள் மத்தியில் கெட்டுப் போய் உள்ளது. கருத்துக்கள் நடத்தினால் 10 சதவீத மக்கள் கூட காவல்துறையினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓசியில் ஆம்லெட் கேட்கும் நிலைக்கு காவல்துறையினர் உள்ளனர். காவல்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இருவரையும் சரி சம நிலையில் வைத்து பார்க்க வேண்டும், என்றார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 361

    0

    0