போதைப் பொருள் கடத்தல்; ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமீன் கிடைத்தது; வைக்கப்பட்ட செக்,..

Author: Sudha
12 July 2024, 9:43 am

திமுக வில் அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து சத்துமாவு தேங்காய் பவுடர் போன்றவற்றுடன் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2500 கோடி ரூபாய் அளவுக்கு போதை பொருளை கடத்தியுள்ளது தெரியவந்தது. தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.போதைப் பொருள் சர்ச்சைக்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, கடந்த மார்ச் 9ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது திரைத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வழக்கு விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட் கிழமையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

செல்போனை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகவரி மாறினால் அது குறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.மேலும் ஜாமீன் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப் பொருள் வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும் ஜாபர் சாதிக் வெளியே வர முடியாத நிலையில் செக் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக் திஹார் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலலை ஏற்பட்டுள்ளது.

  • siruthai siva shift his office from anna nagar வீட்டை காலி செய்யும் சிறுத்தை சிவா? கங்குவா படத்தால இப்படி ஒரு நிலைமையா வரணும்?