கும்பகோணம் : கும்பகோணம் அருகே தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்து பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஆவார். இவரது மகன் வெற்றி செல்வன் (42), இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்களுக்கு ஹன்சிகா (6) என்ற மகளும் உள்ளார். வெற்றிச்செல்வன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 21-ந் தேதி மாலை தனது சொந்த ஊரான கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. வெற்றிச்செல்வன் வீடு திரும்பாததால் அவரது உறவினர்களும், நண்பர்களும் வெற்றி செல்வனை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் வெற்றிச்செல்வன் மனைவி ராஜேஸ்வரி தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை கும்பகோணம் ரயில் நிலையத்தில் கார் ஒன்று வெகுநேரமாகியும் ஒரே இடத்தில் இருந்ததாகவும், காரின் அருகில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததாகவும், அவ்வழியே சென்ற பொதுமக்கள் அருகிலிருந்த ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் காரின் அருகே இருந்த நபர் இறந்துவிட்டார் என தெரியவந்தது.
இதையடுத்து காரை ஆய்வு செய்த ரயில்வே போலீஸார் காரின் உள்ளே இருந்த செல்போனை எடுத்து அதில் தொடர்புகொண்ட எண்களை விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் இறந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. பஞ்சவர்ணத்தின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தார் வெற்றிச்செல்வன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
–
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
This website uses cookies.