சென்னை : தனக்கு தெரியாமல் மர்மநபர்களை வீட்டிற்கு அனுமதித்த முன்னாள் பெண் எம்பி மீது கணவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளவர் சசிகலா புஷ்பா. அதிமுக முன்னாள் எம்பியாக இருந்தவர். தற்போது இவர் சென்னை பாடி டிவிஎஸ் காலனி பகுதியில் உள்ள ஜீவன் பீமாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு தெரியாமல் வீட்டு படுக்கை அறையில் மர்மநபர்களை அனுமதித்தாக இரண்டாவது கணவர் ராமசாமி ஆன்லைனில் சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்த வீடியோவை ஆதாரமாக திரட்டி வழக்கறிஞர் ராமசாமி புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி காரில் கடந்த 13ம் தேதி எனது மகளுடன் சென்னை வந்தேன்.
சென்னை ஜீவன் பீமா நகரில் உள்ள எனது வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன், அப்போது அமுதா என்பவர் கதவை திறந்தார். வீட்டு படுக்கை அறையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடந்தன. மேலும் ஆல்கஹால் வாடையும் வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்திருந்தார். மற்றொரு அறையில் அறைகுறை ஆடையுடன் அடையாளம் தெரியாத மர்மநபர் இருந்தார்.
இதைப்பார்த்த நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன், அப்போது அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டினர். எனவே அவர்கள் மீதும், கணவனாகிய எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் ராமசாமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட ஜெஜெ நகர் போலீசார், சசிகலா புஷ்பாவை காவல்நிலையத்திற்கு நேரில் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.