அந்த ஆண்டவனே என் பக்கம்… எதிரிகளை சர்வ சாதாரணமாக தூசி போல் தட்டி விட்டு செல்வேன் ; தமிழிசை சவுந்திர ராஜன் பேச்சு!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 5:01 pm

மணக்குள விநாயகர் அருளால் எதிரிகளை சர்வ சாதாரணமாக தூசி போல் தட்டி விட்டு செல்வேன் என்று புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நம்பிக்கை தெரிவித்தள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் தனது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு இன்று மீண்டும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வந்தடைந்தார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மக்கள் என் மீது அளவுக் கடந்த அன்பு வைத்திருந்தார்கள். அந்த அன்பு தொடரும் முடிந்து விடாது. புதுச்சேரியில் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. எந்தெந்த வகையில் புதுச்சேரி மக்களுக்கு நல்ல திட்டங்கள் அளிக்கப்படனுமோ, அத்தனையும் மனசாட்சியோடு அனுமதி அளித்திருக்கிறேன், என்றார்.

புதுச்சேரியில் மூன்று மாதம் இருக்க வேண்டும் என்று தான் அனுப்பினார்கள். ஆனால் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் வீதிகளில் செல்லும் போது மக்கள் என் மீது அபரித அன்பாக நடந்து கொண்டார்கள். புதுச்சேரியில் தமிழில் பதவி பிரமாணம் மட்டுமல்ல தமிழில் ஆளுநர் உரையாற்றியாற்றி இருக்கிறேன். அதுவும் தனக்கு பெருமை தான். மகிழ்வான தருணம் தான்.

புதுச்சேரியை விட்டு செல்வது தனக்கு மன வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் அதைவிட சேவை செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு செல்வதாக குறிப்பிட்டார். யார் சொல்லியும் எனது ராஜினாமா முடிவெடுக்கவில்லை. ராஜினாமா என்பது நானே எடுத்த முடிவு தான் என்று திட்டவட்டமாக கூறிய தமிழிசை. ஆளுநர் மாளிகை என்பதை வசதியான மாளிகை. எல்லா சலுகைகளையும் விட்டுவிட்டு வெளியேறுகிறேன். மக்கள் தொடர்பு, மக்கள் சேவை தான் என்பது எனது முழு விருப்பம். அதனால் தான் முழு மனதோடு ராஜினாமா செய்தேன்.

தொடர்ந்து பேசிய அவர், நாளை தமிழக பாஜக கட்சி அலுவலகம் செல்கிறேன். எல்லாம் நள்ளதாகவே அமையும். அங்கு என்ன முடிவெடுக்கிறார்களோ அதை நான் ஏற்றுக் கொள்வேன் வெற்றிகரமான நிகழ்வாக தான் இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். புதுச்சேரிக்கு வருங்காலத்தில் யார் முதல்வராக இருந்தாலும் சரி, வருங்காலத்தில் வரும் ஆளுநராக இருந்தாலும் சரி, புதுச்சேரிக்கு எந்த திட்டங்கள் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்குவேன்.

பெண்கள் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருப்பேன். மணக்குள விநாயகர் மீது அபரித நம்பிக்கை வைத்துள்ளேன். எதிரிகளை சர்வ சாதாரணமாக தூசி தட்டி விட்டு போவது தான், என்னுடைய பலம். இந்த பலம் தனக்கு கை கொடுக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி மறுபடியும் பிரதமராக வரவேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல் அப்படிப்பட்ட பிரதமர் இருப்பதால்தான் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. வேண்டும் மோடி மீண்டும் மோடி என்பதுதான் தனது தாரக மந்திரம், என்றார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!